அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

அரூர், ஜன.3: அரூர் தாலுகா ஆட்டையானூர் கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தில் அங்கக சான்றளிப்பு குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்து, வேளாண் துறையில் உள்ள மானிய திட்டங்கள், உயிர் உரங்கள் பயன்பாடு, மானாவாரி மேம்பாட்டு திட்டம், உழவன் செயலி பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி விதை அலுவலர் மாரியப்பன் அங்கக சான்றளிப்பு முறைகள் பற்றியும், விதை பண்ணை அமைத்தல் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி, பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்ட பணியாளர் வெங்கடேசன், அட்மா வட்டார தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: