தர்மபுரி, டிச.12: சம்பளம் வழங்காததை கண்டித்து, தர்மபுரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாலை கறுப்பு துணியால் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி தொலைதொடர்பு மாவட்டத்தில் 300 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். இதில் தர்மபுரி பிஎஸ்என்எல்லில் மட்டும் 93 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தொலைதொடர்பு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் கருப்பு துணியால் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.