பாலக்கோட்டில் சாக்கடை தூர்வாரும் பணிகள் மும்முரம்

பாலக்கோடு, டிச.6: பாலக்கோடு பேரூராட்சியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடந்தது. பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது. கடந்த 3 மாதங்களாக ஆங்காங்கே டெங்கு உள்ளிட்ட மர்ம காச்சல் பரவி வருவதால், அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் துப்புரவு பணியாளர்கள் இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Related Stories: