காரிமங்கலத்தில் பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

காரிமங்கலம், நவ.15: காரிமங்கலம் பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

காரிமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சப் கலெக்டர் வேதவிநாயகம் தலைமை வகித்தார். பேரூராட்சி உதவி இயக்குனர் ஜீஜாபாய் முன்னிலை வகித்து, பிளாஸ்டிக் பொருட்களின் தீங்குகள் குறித்தும், அரசின் தடை உத்தரவு குறித்தும் விளக்கினார்.

மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் பிருந்தா, ஓட்டல் உரிமையாளர்களிடம்  பிளாஸ்டிக் கவர்களின் தீமைகள் குறித்தும்,  அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கமளித்தார். இதில், தாசில்தார் கேசவமூர்த்தி, செயல் அலுவலர்கள் ஆயிஷா, ஜலேந்திரன், காரிமங்கலம், பாலக்கோடு பேரூராட்சிகளை சேர்ந்த சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: