தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்ட மதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது. நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். தர்மபுரி மாவட்ட அவை தலைவர் சாமிக்கண்ணுவின் இல்லத்திருமணம், நாளை(9ம் தேதி) அரூர் கொங்கு வேளாளக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.