தென்காசி கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் நாளை தேரோட்டம்

தென்காசி, நவ.1: தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (2ம் தேதி) காலை 8.20 மணிக்கு மேல் நடக்கிறது. இதற்காக உலகம்மன் தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. 4ம் தேதி காலை 8.20 மணிக்கு மேல் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 6.05 மணிக்கு மேல் தெற்குமாசிவீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசுக்காட்சி கொடுத்தல், இரவில் 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் அனைத்து கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: