மாவட்ட அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தர்மபுரி, அக்.17: தர்மபுரி விஞ்ஞானிகள் என்ற தலைப்பில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, தர்மபுரி மருதம் நெல்லி கல்லூரியில் நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டது. அதில் நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி திவ்யா கண்டுபிடிப்பான காது கேட்காத மற்றும் பார்வையற்றவர்களுக்கான அழைப்பு மணி என்ற கண்டுபிடிப்பிற்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு ₹10ஆயிரமும், பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக பெற்றார்.

பரிசு பெற்ற மாணவியை முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வாழ்த்தினார். உடன் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், வட்டாரக் கல்வி அலுவலர் பழனி, தலைமை ஆசிரியர் நரசிம்மன், வழிகாட்டி ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் முருகன், கந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: