மெணசி- விழுதப்பட்டி வழியில் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.16:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியில் இருந்து விழுதப்பட்டி செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி-விழுதப்பட்டி செல்லும் பிரதான சாலை பழுதடைந்த நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்து வந்தனர். அதன் ேபரில், ஊராட்சி நிர்வாகம் சார்பில்,

மெணசி-விழுதப்பட்டிக்கு புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 3கி.மீ தொலைவிற்கு சாலை தோண்டப்பட்டது. ஆனால், அதன் பின்னர் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. இதன் காரணமாக, கடந்த 20 நாட்களாக இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: