மோதூரில் டெங்கு ஒழிப்பு பணிகள் ஆய்வு

காரிமங்கலம், அக்.12: காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிரவாகம் சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாஸ் தொடங்கி  வைத்தார். தொடர்ந்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில், கழிவு நீர் கால்வாய் மற்றும் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணி நடந்தது. பெரியாம்பட்டி, ஜக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் டெங்கு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை பி.டி.ஓ.க்கள் வெங்கடரமணன், வடிவேலன், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் குணசேகரன், முருகன், சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories: