ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி சிறப்பு முகாம்

கோவை, செப்.25: கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த ஜீவா நகரில்  200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வண்டிப்பாதையாக இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் சங்கனூர் ஓடைப்பகுதியில் இருந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீட்டுக்குள் அடிக்கடி மழைநீர் புகுந்தது. இந்த விவகாரம் ெதாடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, ஆக்கிரமிப்புகளை ஆறு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால், மாநகராட்சி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுதொடர்பாக எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜீவா நகரில் வசிப்போர் ரூ.36 ஆயிரம் ஒதுக்கினால் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு துறைகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முகாம்களும் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பங்கேற்ற பலர் வீடுகளை பெற்றனர். ஆனால், பலரும் முகாம்களில் பங்கேற்காமல், அப்பகுதியிலேயே தொடர்ந்து வசித்தனர். இவர்களுக்கு இறுதி வாய்ப்பாக நேற்று மாநகராட்சி நகரமைப்புத்துறையின் சார்பில் முகாம் நடத்தப்பட்டது.   நேற்று காலை 11 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட்ட முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: