வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செப்.23ல் சிறப்பு முகாம்

கோவை, செப். 21:  கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு திருத்தம் நடந்து வருகிறது. 1.1.2019 நாளை தகுதி நாளாக கொண்டு 18வயது பூர்த்தியடைந்தவர்கள்  வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம், கடந்த 1, 9, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது நான்காவது வாரமாக வரும் 23ம்தேதி இம்முகாம் நடக்கிறது. அன்றையதினம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள், ஆர்.டி.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் அளிக்கலாம்.

இம்முகாமில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் இணைத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: