சசிக்குமார் கொலை வழக்கு என்ஐஏ அதிகாரிகள் முன் பிஎப்ஐ தலைவர் ஆஜர்

கோவை, செப். 21: இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக என்ஐஏ முன் ஆஜராகுமாறு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அன்வர் உசேனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

 இதையடுத்து, அன்வர்உசேன் நேற்று காைல ரேஸ்கோர்சில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் அமைப்பின் மாவட்ட செயலாளர் அப்பாஸ், ஹக்கீம், செய்தி தொடர்பாளர் நவுபல் மற்றும் கரும்புக்கடை, செல்வபுரம் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் சென்றனர். அன்வர் உசேனிடம் மட்டும் என்ஐஏ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப்பின் அன்வர்உசேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 தொடர்ந்து அன்வர் உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசாரணையின் போது சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை. எங்களின் இயக்கம் தொடர்பான கேள்வி தான் கேட்கப்பட்டது. இயக்கத்தின் நிர்வாகம், செயல்பாடு, இயக்கத்தில் யார் யார் உள்ளனர். பிஎப்ஐ என்றால் என்ன? போன்ற கேள்விகளை தான் கேட்டனர். இந்த கொலை தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி உள்ளதை குறித்து என்ஐஏ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, அவர்களிடம் பதில் இல்ைல. சசிகுமார் கொலைக்கு பின் நடந்த வன்முறைகள் குறித்து ஏன் என்ஐஏ விசாரிக்கவில்லை. சசிகுமாரை கொலை செய்தவர்களின் மீது கடுமையான நடவடிக்கையை எடுங்கள். ஒருதலை பட்சமான விசாரணையாக இல்லாமல், நடுநிலையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என என்ஐஏ அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதற்கும் அவர்களிடம் இருந்து பதில் இல்லை என்றார்.

Related Stories: