என்சிசி மாஸ்டருக்கு சிறந்த ஆசிரியர் விருது

கோவை, செப்.12: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி தேசிய மாணவர் படை ஆசிரியர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை லயன்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை தேர்வு செய்து சிறந்த ஆசிரியர் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, மீனாட்சி பெண்கள் கலை கல்லூரியில் கடந்த 8ம் தேதி நடந்தது.

இதில், கல்லூரியின் முதல்வர் மற்றும் லயன்ஸ் கிளப்பின் மாநில கவர்னர் பாபாய் என்சிசி ஆசிரியர் ஆர்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு விருதினை வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: