லளிகம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தலைவர் தேர்வு

தர்மபுரி, ஆக.14:  லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இயக்குனர்கள், தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நல்லம்பள்ளி அருகே லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 8 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு வரவு செலவு ரூ10 கோடி உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்திற்கு 11 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அங்குராஜ், ஸ்டாலின், புனிதம் பழனிசாமி, முருகேசன், பெருமாள்,

செல்லப்பன், கோபால கிருஷ்ணன், கோடக்காரன், சாந்தி, ராணி, பெருமாக்காள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக அங்குராஜ், துணைத்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர். இயக்குனராக தேர்வு செய்யப்பட்ட, தர்மபுரி மாவட்ட திமுக தொண்டரணி பழனிசாமி மனைவி புனிதம், தர்மபுரி எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: