ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி இன்டராக்ட் சங்கம் தொடக்கம்

அரூர், ஆக.14:  கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ரோட்டரி இன்டராக்ட் சங்கம் தொடங்கப்பட்டது. அரூர் அருகே கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தர்மபுரி மிட் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, பள்ளியில் புதியதாக ரோட்டரி இன்டராக்ட்  சங்கத்தை தொடங்கி வைத்தனர். இதில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களை  அங்கத்தினர்களாக இணைத்து, மக்களுக்கு பொது தொண்டாற்றுவதே சங்கத்தின் முக்கிய  பணியாக இருக்க வேண்டம் எனவும், மக்களின் சமூக நலனில் மாணவர்களின் பணி மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில், ரோட்டரி சங்க மிட் டவுன் சேர்ந்த தலைவர் கோவிந்தராஜன், ராமமூர்த்தி  மற்றும் செயலாளர் ஜெயவெங்கடேசன், துணை செயலாளர் கண்ணன், வெங்கடரமணி, பிரதீப்குமார், முன்னாள் தலைவர் லட்சுமணன், சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் ஏவிஎஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்  தொல்காப்பியரசு ஆகியோர் கலந்து கொண்டு, ரோட்டரி சங்கத்தின் முக்கிய பணிகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி கல்வி இயக்குனர்  ஜான் இருதயராஜ் வரவேற்றார். சங்க உறுப்பினர்களுக்கு, பள்ளி  தாளாளர் வேடியப்பன் முன்னிலையில், ரோட்டரி சங்கத்தின் சார்பில், பதவிப்  பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: