காரிமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

காரிமங்கலம், ஆக.14:காரிமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காரிமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் புதிய நிர்வாகக்குழு தலைவராக சண்முகம், துணை தலைவராக ரவி, இயக்குனர்களாக ஹரி, பழனி, ராணி, மல்லிகா, தேவி, ராமசந்திரன், ஜிம் முருகன், காளியப்பன், முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும், சங்கத்தின் தேர்தல் அலுவலர் சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கினார். சங்க செயலாளர் பசுபதி மற்றும் சங்க பணியாளர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: