ஆபத்தான மின்கம்பத்தை இடம் மாற்ற வேண்டும்

தர்மபுரி, ஆக.14:  அன்னசாகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் புகார் மனு கொடுத்தனர். தர்மபுரி நகராட்சி அன்னசாகரம் திதிஅய்யாவு முதலிதெருவை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கிருஷ்ணன் மகள் கவிபிரியா. இவரது மகன்கள் மாணவர்கள் மகேஸ்வரன்(7), கீர்த்திக்(4) ஆகியோர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னசாகரம் திதிஅய்யாவு முதலிதெருவில் எங்கள் தாத்தா, பாட்டி வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். வீட்டின் அருகே கடந்த 30ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் தாத்தா பட்டா நிலத்தில் வைத்தனர். அப்போது இடம் நெருக்கடி இல்லாமல் இருந்தது. நட்ட கம்பத்தை கவனிக்காமல் விட்டோம். தற்போது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கவும், நாங்கள் வளர்ந்து வருவதால்,

கூடுதல் அறைகள் தேவைப்படுகிறது. அதற்கு வீட்டை கட்ட முயற்சி செய்தால், வீட்டின் அருகில் மின்கம்பத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு மின்பாதை செல்கிறது. இதனால் துணி காய வைக்க முடியவில்லை. வீடு கட்ட முடியவில்லை. நாங்கள் மொட்டை மாடியில் விளையாட முடியவில்லை. இதுகுறித்து, எங்கள் தாத்தா பலமுறை மின் வாரியத்திற்கு மனு அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனரீதியாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, இந்த மின்கம்பத்தையும், மின்பாதையும் மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: