பழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்

தர்மபுரி, மே 23: பழங்குடியினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என, தலித் விடுதலை கட்சி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட தலித் விடுதலை கட்சி, மாவட்ட செயற்குழு கூட்டம், பெரியார் மன்றத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் வீராசாமி, பொருளாளர் அருண், ஒன்றிய துணை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அரசு பட்டியல் பழங்குடியினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் திருத்தம் கொண்டு வருவதாக தெரிகிறது. தற்போது இருக்கும் நிலையே நீட்டிக்க வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் வழங்கப்படும், தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகை தடையில்லாமல் வழங்க வேண்டும். கர்நாடகாவில் அமையவுள்ள புதிய அரசு காவிரி மேலாண்மை வாரியம் கூறியபடி, தண்ணீர் திறந்துவிட வேண்டும். வரும் 4ம் தேதி நத்தம்காலனி இளவரசன் நினைவு தினத்தை அனுசரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: