அன்புஜோதி ஆசிரம வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 6 பேரிடம் 2வது நாளாக விசாரணை: சிபிசிஐடி கிடுக்கிப்பிடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 6 பேரிடம் போலீஸ் காவலில் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாகவும், பாலியல் பலாத்காரம் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் கைதாகி வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூபின்பேபி மனைவி மரியா, பணியாளர்கள் பிஜூமோகன், கோபிநாத், பூபாலன், அய்யப்பன் உள்ளிட்ட 6 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்தது இதையடுத்து 6 பேரையும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு தனி அறையில் அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

நேற்று 2வது நாளாக  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காப்பகங்களில் இருந்து வெளிமாநலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் விவரம், இதற்காக ஜூபின்பேபி எவ்வளவு பணம்  பெற்றார்? வெளி மாநிலங்களில் யார், யாருக்கு தொடர்பு என்பது குறித்து  கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். 

Related Stories: