சென்னை: விருத்தாசலத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலர் சரவணனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: அன்பின் வழியது உயிர்நிலை, சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது, ‘‘காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.
வீரத்தின் அடித்தளம் அன்புதான்” என அறிவுறுத்தி இருந்தேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள தலைமைக் காவலர் சரவணனுக்கு பாராட்டுகள். இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
