எடப்பாடி பழனிசாமி பிஏ ஜாமீன் மனு தள்ளுபடி

சேலம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி. தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மணியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மணி சார்பில் அவரது வழக்கறிஞர் விவேகானந்தன், ஜாமீன் கேட்டு சேலம் 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் லட்சுமி பிரபா ஜாமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘மணியின் முக்கிய கூட்டாளி இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறார். மணி அரசியல் செல்வாக்கு உள்ளவர். இதனை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வரமறுப்பார்கள். எனவே, ஜாமீன் கொடுக்க கூடாது’ என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதித்துறை நடுவர் கலைவாணி, நடுப்பட்டி மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: