சின்டெக்ஸ் டேங்க் வைக்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே கொப்பகரை கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 12வது வார்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், 11வது வார்டை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், தங்கள் பகுதியிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நேற்று 20க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொம்மிடி போலீசார் மற்றும் விஏஓ முருகவேல் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: