ஆசிரியர் பயிற்சி தேர்வு; தனித்தேர்வர்கள் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் பயிற்சி படித்து தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்காக மே மாதம் நடத்தப்பட உள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பயிற்று நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள் தற்போது மீண்டும் தேர்வு எழுத தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் தோல்வியடைந்த மாணவ, மாணவியர் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத உள்ள ஒவ்ெவாரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்று (முதலாம்ஆண்டு) ரூ.100, மதிப்பெண் சான்று (இரண்டாம் ஆண்டு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்).

மேற்கண்ட தேர்வு கட்டணம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறும் மாணவ, மாணவியர் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும், என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: