கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் கேரள தோட்ட வேலைக்கு செல்ல தமிழக தொழிலாளர்களுக்கு அனுமதி

கம்பம்: கொரோனா பரவல் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கேரளாவிற்கு தினசரி வேலைக்கு செல்லும் தமிழக தோட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் சோதனைகள் செய்யாமல் அனுமதிக்க வேண்டுமென பல போராட்டங்கள் செய்து வந்தனர். ஆனாலும் கேரள சோதனைச்சாவடியில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்குள் அனுமதிக்கக் கோரி, 5 ஜீப்களில் தோட்டத்தொழிலாளர்கள் தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச்சாவடி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற ஏலத்தோட்ட தொழிலாளர்கள் சுமார் 40 பேர், நேற்று கம்பத்திலிருந்து வாகனங்களில் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: