சில்லி பாயின்ட்...

* உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது பற்றி சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ பரிசீலிக்க வேண்டும் என்று அதன் தலைமை நிர்வாகிகளின் ஒருவரான ஆர்சென் வெங்கர் கூறியுள்ளார்.

* அடுத்த மாதம் லாட்வியாவுக்கு எதிராக நடைபெற உள்ள பில்லி ஜீன் கிங் கோப்பை உலக பிரிவு பிளே ஆப் டென்னிஸ் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தண்டி, ஸீல் aதேசாய், ருதுஜா போசலே.

* ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் மான் (74 கிலோ எடை பிரிவு) தகுதி பெற்றுள்ளார்.

* பாட்டியாலாவில் நடக்கும் பெடரேஷன் கோப்பை தேசிய தடகள போட்டியின் (சீனியர்) மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி (22 வயது) தங்கப் பதக்கம் வென்று (11.39 விநாடி) அசத்தினார். நட்சத்திர வீராங்கனை டூட்டீ சந்த் (11.58) வெள்ளிப் பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் (11.76) வெண்கலமும் வென்றனர். இதே போட்டியில் பங்கேற்ற ஹிமா தாஸ் தவறான தொடக்கம் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

* கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளதாக எழுந்த புகாரில் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் முகமது நவீத், ஷைமான் அன்வர் பட் இருவருக்கும் 8 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories: