ஆசிய பேட்மின்டன் சாம்​பியன்​ஷிப் ஆயுஷ் ஷெட்டி 2வது இடத்துக்கு முன்னேற்றம்

நிங்க்போ: போ நகரில் ஆசிய பேட்மின்டன் சாம்​பியன்​ஷிப் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்​தில் உள்ள சீனா​வின் ஷி பெங்குடன் மோதி​னார்.

51 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 30-ம் நிலை வீர​ரான இந்தியா​வின் கிடாம்பி காந்த் 21-18, 9-21, 11-21 என்ற செட் கணக்​கில் 11-ம் நிலை வீர​ரான சிங்​கப்​பூரின் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்​தார். அதேவேளை​யில் 35-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் ஹெச்.எஸ்​.பிர​னாய் 24-22, 21-12 என்ற செட் கணக்​கில் 62-ம் நிலை வீர​ரான வியட்​நாமின் நூயன் ஹாய் டாங்கை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 12-ம் நிலை வீரரான லக் ஷயா சென் 12-21, 19-21 என்ற செட் கணக்​கில் 22-ம் நிலை வீர​ரான ஹாங் காங்​கின் லீ செக் யுவிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 2 முறை ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற இந்தியாவின் பி.​வி.சிந்து 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்​கில் 38-ம் நிலை வீராங்கனை​யான மலேசி​யா​வின் வாங் லிங் ஷிங்கை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

Related Stories: