மப்பில் கார் ஓட்டிய வார்னர் மறித்து தூக்கிய போலீஸ்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சிட்னியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். சிட்னியின் கிழக்குப் பகுதியில் உள்ள மரூப்ரா என்ற இடத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு காரில் வேகமாக வந்த வார்னர் காரை மறித்து போலீசார் பிரீத்திங் சோதனை செய்தனர். அப்போது வார்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக (0.104) மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மே 7ம் தேதி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான சம்மனை அவருக்கு வழங்கினர். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் வார்னர், போட்டித் தொடரின் இடையே கிடைத்த விடுமுறையை கழிக்க சொந்த ஊர் சென்ற போது இந்த வழக்கில் சிக்கியுள்ளார். நாளை பாகிஸ்தான் திரும்பும் அவர் வழக்கம்போல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார்.

Related Stories: