புதுடெல்லி: ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தோள்பட்டை மற்றும் முழங்கை காயம் காரணமாக இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த கோடைகால போட்டிகளின் போது ஸ்டார்க்கிற்கு ஏற்பட்ட இந்த காயத்தால் அவர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அவர் ஏப். 20ம் தேதி வரை டெல்லி அணியில் இணைய வாய்ப்பில்லை என தெரிகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது அக்சர் படேல் தலைமையில் விளையாடி வருகிறது. அணியின் துவக்கநிலை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கிற்கு பதில் தற்போது லுங்கி என்கிடி பந்து வீச்சில் முக்கிய பங்காற்றி வருகிறார். ஸ்டார்க் ஏப். 21ம் தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ேபாட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
