ஆசியா பேட்மின்டன் முதல் சுற்றில் முந்திய சிந்து

நிங்போ: பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் நிங்போ நகரில் பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மலேசிய வீராங்கனை லிங் சிங் வாங் உடன் மோதினார்.

முதல் செட்டில் சிறப்பாக ஆடிய வாங், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, அடுத்த இரு செட்களையும், 21-11, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மாவை, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மலேசிய வீராங்கனை லட்சணா கருப்பதேவன், 21-19, 21-14 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகதி பெற்றார். இன்னொரு போட்டியில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோடை, தாய்லாந்து வீராங்கனை பூசானன் ஒங்பம்ருங்பான் 21-10, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

Related Stories: