வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவராக தமிம் இக்பால் நியமனம்

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவராக தமிம் இக்பால் நியமனம் செய்யப்பட்டார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அமினுல் இஸ்லாம் இருந்து வந்தார். இவரது தலைமையிலான குழு பல்வேறு நிர்வாக தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து அந்நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சில் அக்குழுவை நீக்கியது. தொடர்ந்து புதிய குழுவை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் நடத்தப்படும்வரை கிரிக்கெட் வாரியத்தின் வழக்கமான பணிகளை கவனிப்பதற்காக 11 பேர் கொண்ட இடைக்கால குழுவை அமைத்துள்ளனர்.

இந்த குழுவிற்கு வங்கதேச அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கேப்டனுமான தமிம் இக்பால் தலைமை தாங்குவார் என அறிவித்துள்ளனர். மேலும் இவரது தலைமையின் கீழ் 11 பேர் கொண்ட குழு உறுப்பினர்களாக ராஷ்னா இமாம், மிர்சா யாசிர் அபார், சையது இப்ராகிம் அகமது, இஸ்ரபில் கோசுரு, மினாஜுல், அபிடின் நானு, ஆதர் அலி கான், டாஞ்சில் சவுத்ரி, சல்மான் இசபானி, ரபில் இஸ்லாம் பபு, பாகிம் சின்கா, அகர் அலி கான் ஆகியோர் செயல்படுவர் எனவும் அறிவித்துள்ளனர்.

Related Stories: