மான்டேகார்லோ டென்னிஸ் மிரள வைத்த மாத்தியோ சரண்டரான மெத்வதேவ்: டபுள் பேகல் வெற்றி பெற்று அசத்தல்

ரோக்புருன் கேப்மார்டின்: மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இத்தாலி வீரர் மாத்தியோ பெரெத்தினி, முன்னணி வீரர் டேனியில் மெத்வதேவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். பிரான்சின் ரோக்புரூன் கேப்மார்டின் நகரில் ஆடவர்கள் பங்கேற்கும் மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீரர் டேனியில் மெத்வதேவ், இத்தாலியை சேர்ந்த, உலகின் 90ம் நிலை வீரர் மாத்தியோ பெரெத்தினி உடன் மோதினார். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மாத்தியோ, முதல் செட்டை ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர், 2வது செட்டையும், 6-0 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.

இதன் மூலம் ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் 2-0 என்ற நேர் செட்களில் டபுள் பேகல் முறையில் வெற்றி வாகை சூடிய அவர், காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி வெறும் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, பெல்ஜியம் வீரர் ஜிஸோ பெர்க்ஸ், ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்ளெவ் மோதினர். இப்போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஜிஸோ, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: