வாணியம்பாடி அருகே மர்மநபர்கள் சேதப்படுத்திய சின்டெக்ஸ் தொட்டி

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மர்மநபர்கள் சேதப்படுத்திய சின்டெக்ஸ் தொட்டியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் மல்லகுண்டா சாலையில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதை அப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். பின்னர், இந்த சின்டெக்ஸ் டேங்க் பல நாட்களாக செயல்படாமல் இருந்தது.

 

இந்நிலையில், மர்ம நபர்கள் சின்டெக்ஸ் டேங்க்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், விவசாய நிலம் அருகே இருந்த சின்டெக்ஸ் டேங்க் சேதப்படுத்தியதால் கால்நடைகளுக்கு பயன்பெற முடியாமல் உள்ளது.

இதுகுறித்து நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: