சென்னையில் சுதாகரன், இளவரசியின் 6 சொத்துக்கள் அரசுடைமை: நீதிமன்றம் தீர்ப்பின் படி அரசு நடவடிக்கை: சசிகலா பெயரில் உள்ள கொடநாடு எஸ்டேட்டை கையகப்படுத்த தயக்கமா?

சென்னை: சசிகலா தமிழகம் வரும் நிலையில் சுதாகரன் மற்றும் இளவரசியின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்குவதற்கு சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சென்னை ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சுதாகரன்,  இளவரசி ஆகிய இருவருக்கும் சொந்தமான 6 சொத்துக்கள் அரசின் உரிமைக்கு மாற்றப்படுகின்றன.

இவை அனைத்தும் சொத்துக்குவிப்பு வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேர்க்கப்பட்டவை ஆகும். இந்த சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அவற்றை கையகப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் வாடகை நிலுவை வாடகை, உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதாகரன் இளவரசி ஆகிய இருவருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தியுள்ள தமிழக அரசு சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்டின் 900 ஏக்கர் நிலத்தை வசப்படுத்தவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது பங்குதாரராக இருந்த சசிகலாவுக்கு உரிமைகி விட்ட கொடநாடு எஸ்டேட்டை கையகப்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: