கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய நபரை விரட்டிய காட்டுயானை காரை புரட்டித்தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை ஒட்டியே தோட்டமுலா, ஏழுமுறம் உள்ளிட்ட கிராமங்களில் காட்டியானை இரவு நேரத்தில் சுற்றி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
வில்சன் என்பவர் தனது வீட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது காட்டுயானை விரட்டியதால் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காட்டுயானை காரை புரட்டி பள்ளத்தில் தள்ளியதால் சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் காட்டுயானை நடைப்பயிற்சி செய்பவர்களை விரட்டியவாறு செல்கிறது.
சில வீடுகளின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் காட்டுயானையை கட்டுப்படுத்தி முதுமலை காட்டுக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்று அந்த கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.