தோசை சுட்டால் கூட பதிவு அதற்கும் குவிகிறது ‘லைக்’: ஆர்.சாம், தனியார் சாப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரி

டிக் டாக் செயலியை 10 சதவீதம் பேர் தான் தவறாக பயன்படுத்துகின்றனர். மற்றப்படி கோடிக்கணக்கானோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்வதற்காகவே பயன்படுத்தி வருகின்றனர். எல்லோருக்கும் தங்களது திறமையை  வெளிப்படுத்த உரிய வழி கிடைப்பதில்லை. அந்த வழியை தான் டிக் டாக் செயலி மூலம் வெளிக்கொண்டு வருகின்றனர். ஒருவர் நன்றாக தோசை சுடுகிறார்  என்பதை கூட டிக் டாக் செயலியில் பதிவு செய்கிறார். அதையும் பலர் லைக்  போடுகின்றனர்; மற்றவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது அதில் அவர்களுக்கு தனி மகிழ்ச்சி. இந்த செயலி ஒருவரை ஊக்குவிக்கும் களமாக தான் உள்ளது. நீங்கள் நெகட்டிவ் என்பதை பார்க்கும் போது இதில் பாசிட்டீவ் பக்கம் அதிகமாக தான் உள்ளது. இந்த செயலியை இளைஞர்கள் பலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்களது  திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் பலரை கவர முயற்சிக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சினிமா, தொலைக்காட்சிகளில் கூட வாய்ப்பு கிடைக்கிறது. டிக் டாக் செயலி போன்று ஹலோ செயலி உள்ளது. இதை தவிர்த்து ஸ்மூல்  (smule) என்கிற செயலி உள்ளது. இதில், டிக் டாக் செயலியில் தான் அதிகமான வசதிகள் உள்ளது.  எனவே தான் டிக் டாக் செயலியில் காமெடியாக நடிப்பது, வீடியோவுக்கு ஆடுவது, தாங்களே பேசி வெளியிட்டு அதை எடிட் செய்து கொள்வது போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த செயலி மட்டும் தான் மற்ற செயலிகளைவிட  சிறந்ததாக உள்ளது. இந்த செயலிக்கு எவ்வளவு வீடியோ வேண்டுமென்றால் அப்லோட் செய்து கொள்ளும் அளவுக்கு அதன் சர்வர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த செயலியில் 15 நிமிடம், 1 நிமிட வீடியோ தருகின்றனர். இந்த வீடியோவை,  அந்த செயலியே சுருக்கி விடுகிறது. இது போன்று எத்தனை வீடியோக்கள் வேண்டுமானாலும் பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் 5 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப அந்த நிறுவனம் சார்பில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் சர்வர்கள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த சர்வர்கள் டிக்டாக்  செயலியில் தடங்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. டிக் டாக் செயலி நிறுவனம் தரப்பில் ஓய்வில் இருக்கிறவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்த தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.  ஆனால், இங்கு நிறைய பேர் இந்த செயலியை வேலையில்லாத நிலையில் இதே வேலையாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா மோகம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம்நாட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் முதல் வயதானோர் வரை தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போன்று பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இதை ஒரு பிளாட்பார்மாக  பயன்படுத்தி கொள்கின்றனர். இதை பயன்படுத்தி சினிமாவுக்குள் வந்தவர்கள் கூட உள்ளனர். இந்த டிக்டாக் செயலியில் ஒருவரை லட்சக்கணக்கானோர் பாலோ செய்யும் போது அவர்கள் ஒரு பிரபலமானவராக ஆகி விடுகின்றனர். அதை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  இந்த செயலி மூலம் தன்னை தனித்து காட்ட வேண்டும் என்பதை தான் பலர் பயன்படுத்துகின்றனர். இந்த செயலியில் கட்டுப்பாடு இருக்க தான் செய்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆபாசமான வீடியோவாக இருந்தால், சாதி ரீதியான வீடியோவாக இருந்தாலும் அதை டிக் டாக் செயலில் நீக்க முடியும். ஒரு நபர் தொடர்ந்து ஆபாசமாகவோ, மோதலை தூண்டும் வகையில் பதிவு செய்து  வருவதாக, மற்றவர்கள் புகார் அளித்தால் அந்த நபரின் டிக்டாக் கணக்குகளை முடக்க முடியும். அந்த அளவுக்கு டிக் டாக் செயலியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.குழந்தைகள், பெண்கள் முதல் வயதானோர் வரை  தங்களுக்கு பிடித்த  நடிகர், நடிகைகள் போன்று பிரதிபலிக்க வேண்டும்  என்பதற்காக இதை ஒரு பிளாட்பார்மாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

Related Stories: