கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட ரயில் விரைவில் இயக்கம்

சென்னை, ஜூன் 23: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கபட்டாலும் புறநகர் மின்சார ரயில்கள் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை மாநகரம் ஸ்தம்பித்து விடுகிறது. இந்த ரயில்கள் மூலம் நாள்தோறும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு 15 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கியுள்ளதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவில் மற்றும் ஏசி முன்பதிவு ரயில் பெட்டிகளில் மட்டுமே ஏசி வசதி இருந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட ரயில் விரைவில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: