ஆட்டோ டிரைவர்களுக்கு பாராட்டு சாலையில் கிடந்த ரூ.10,000 போலீசில் ஒப்படைப்பு

பெரம்பூர்: திரு.வி.க.நகரை சேர்ந்தவர் சகாயராஜ் (55). அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (52). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் நேற்று முன்தினம் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் சென்ற ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் சாலையில் விழுந்தது. இதை எடுத்த ஆட்டோ டிரைவர்கள், ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பணத்தை தவற விட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கிடந்த பணத்தை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்களை போலீசார் பாராட்டினர்.

The post ஆட்டோ டிரைவர்களுக்கு பாராட்டு சாலையில் கிடந்த ரூ.10,000 போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: