திருவனந்தபுரம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 17 வயது நடிகை தன்னை காப்பாற்றுமாறு கதறியவாறு வந்ததாக நடிகை ரேவதி பேட்டியளித்த நிலையில் அந்த நபர்கள் மீதும், இதுகுறித்து புகார் அளிக்காமல் மூடி மறைத்த ரேவதி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ேபாலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் ெகாச்சியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ரேவதி, ‘‘மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரவில் 17 வயதான ஒரு இளம் நடிகை என் அறை கதவை தட்டினார். நான் கதவை திறந்தபோது அக்கா என்னை காப்பாற்றுங்கள் என கூறி அழுதார். இதுபோன்ற பல சம்பவங்கள் மலையாள சினிமாவில் நடந்து வருகிறது’’ என்று கூறினார். இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர் எர்ணாகுளம் மத்திய போலீசில் நேற்று ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில், ‘‘சில வருடங்களுக்கு முன்பு மலையாள படபிடிப்புக்கு இடையே 17 வயது நடிகையை பலாத்காரம் செய்ய யாரோ முயற்சித்ததாக நடிகை ரேவதி கூறியுள்ளார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்ைத மூடி மறைத்த நடிகை ரேவதி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை ரேவதி கூறுகையில், ‘‘பல வருடங்களுக்கு முன்பு 17 வயது நடிகை நள்ளிரவில் எனது அறை கதவை தட்டி காப்பாற்றுமாறு கூறியது உண்மைதான். ஆனால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி நடந்தது என்று நான் கூறவில்லை. நள்ளிரவு யாரோ அவரது அறை கதவை தட்டியதால் பயந்து எனது அறைக்கு வந்தார். அந்த பெண்ணுடன் அவரது பாட்டியும் வந்தார். இரவு 3 பேரும் அறையில் தூங்காமல் இருந்தோம். பெண்களுக்கு தொழில்புரியும் இடங்களில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை தெரிவித்தேன்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி