புதுடெல்லி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி(நேற்று) முதல் ஜனவரி 4ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் முதல்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அடங்கிய சிறப்பு விசாரணை அமர்வு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று விசாரணைகள் தொடங்கியதும், வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளுக்கான அவசரப் பட்டியல்களைக் கோரினர்.
அப்போது விடுமுறை சிறப்பு அமர்வுக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி கூறுகையில், வழக்குகளை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவகத்தை தொடர்பு கொள்ளலாம். வழக்குகளை பட்டியிலிடுவதற்கு அவசரத்திற்கான காரணங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும். காரணங்கள் ஆராயப்படும், அவரசமானது என்று கண்டறியப்பட்டால் டிச.26 அல்லது டிச.29 அன்று தற்காலிகமாக அவை பட்டியலிடப்படும் என்றார்.
