கேரளா உட்பட 5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் குஜராத் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் பணிகள் நிறைவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களும், அதேப்போன்று குஜராத்தில் 73 லட்சம் வாக்காளர்களும் முந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ”நாளை(இன்று) கேரளா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட நான்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: