ஒரத்தநாடு அருகே லட்சுமிபுரத்தில் இடிந்து விழும் அபாயத்தில் கிளை ஆற்று பாலம்

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே உள்ள லட்சுமிபுரத்தில் இடிந்து விழும் நிலையில் கிளை ஆற்றின் பாலம் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரத்தநாடு தாலுகா அம்மன்குடி அடுத் லட்சுமிபுரம் அக்கரைவட்ட கிளை ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த பாலம் வழியாக தினம்தோறும்ட ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலம் துவங்குவதற்குள் சேதமடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: