உயிருக்கு போராடிய சிறுமிக்கு உதவிய ஸ்ருதி ஹாசன்

சென்னை: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்ற ஸ்ருதி ஹாசன் உதவி செய்துள்ளார்.
ஆழ்வி என்ற சிறுமி MSMD எனப்படும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயைக் குணப்படுத்த சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது.

சிறுமியின் நிலையை அறிந்த ஸ்ருதி ஹாசன், உடனடியாக சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்கி, சிறுமி ஆழ்விக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கவும் உதவியுள்ளார். இதனால் அந்தச் சிறுமிக்குத் தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது ஆழ்வி முற்றிலும் குணமடைந்துள்ளார்.

சிறுமியுடன் அவரது பெற்றோர் ஸ்ருதி ஹாசனை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ‘‘எங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற போராடி வந்தோம். அது பற்றி தெரிந்ததும் ஸ்ருதிஹாசன் உதவ முன்வந்தார். இந்த உதவியை நாங்கள் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்’’ என்று சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.

Related Stories: