பெண்களுக்காக போராடும் சாய் தன்ஷிகா

ஸ்ரீமோனிகா சினி பிலிம்ஸ் சார்பில் செந்தில் குமார் தயாரிக்க, கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள படம், ‘யோகி டா’. வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ள சாய் தன்ஷிகா கூறுகையில், ‘பொதுவாக நாம் பேசுவதை குறைத்துக்கொண்டு, அடுத்து என்ன செய்கிறோம் என்பதை படத்தில் வெளிப்படுத்த வேண்டும். ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் சாரின் மகளாக, யோகி என்ற கேரக்டரில் நடித்தேன். பிறகு அப்பெயரின் அடிப்படையில் ‘யோகி டா’ என்று தலைப்பு சூட்டினோம். ‘கபாலி’ படத்துக்காக தலைமுடியை ‘கட்’ செய்தேன்.

இப்படத்துக்காக ‘விக்’ வைத்துள்ளேன். ‘கபாலி’ படத்தை பார்த்துவிட்டு, மலேசியாவை சேர்ந்த நிறைய பெண்கள் எனது ஹேர்கட் ஸ்டைலுக்கு மாறியது வியப்பாக இருந்தது. ‘யோகி டா’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. ‘பேராண்மை’ படத்தில் முதல்முறையாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரைக்கும் எனக்கு உதவி செய்கிறது. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் நானே ஒரிஜினலாக நடித்துள்ளேன். பெண்கள் நினைத்தால், ஆண்களுக்கு ஈடாக சண்டைக் காட்சிகளில் அதிரடியாக நடிக்க முடியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை உடல்ரீதியாக துன்புறுத்தினால், அதற்கு பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதை தாண்டி வர முடியும் என்பதையே ‘யோகி டா’ படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவுக்கு பெண்களுக்காக படத்தை உருவாக்கியுள்ளோம். கடுமையான உழைப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories: