நிறத்தை வைத்து ரேஷ்மாவை பாடி ஷேமிங் செய்ததால் பரபரப்பு

சென்னை: நடிகை ரேஷ்மா முரளிதரனை சிலர் பாடிஷேமிங் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மீனாட்சி சவுத்ரி, தான் பாடி ஷேமிங்கிற்கு ஆளானது பற்றி பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் ரேஷ்மா முரளிதரனையும் அவரது நிறத்தை வைத்து சிலர் கேலி செய்திருக்கிறார்கள். அவரது நிறத்தை வைத்து நிறைய மோசமான கமெண்ட் வருகிறதாம். தரக்குறைவான வார்த்தை கூறி கருப்பு நிறத்தை விமர்சனம் செய்கிறார்களாம்.

இது பற்றி ரேஷ்மா முரளிதரன் கூறும்போது, ‘‘அந்த வார்த்தை கோபத்தை தூண்டும். ஆனால் வலிக்கல. ஏன் என்றால், அது அவர்களுடைய சொந்த எண்ணத்தைத்தான் காட்டுகிறது. நான் வெள்ளை ஆக வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ ஆகியிருக்கலாம், ஆனால் என் நிறத்தை நான் நேசிக்கிறேன். பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நம்மிடம் அன்பு செலுத்துபவர்களுக்கு நாம் யார் என்பது தெரியும் என நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.

ரேஷ்மாவின் இந்த கருத்தை ஆதரித்துள்ள நெட்டிசன்கள் சிலர் கூறுகையில், ‘நிறத்தை வைத்து ஒருவரை கேலி கிண்டல் செய்வது மிக கீழ்த்தரமான செயல். ரேஷ்மா நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் அவர்கள் யோசிக்க முடியாத முன்னணி இடத்துக்கு செல்வீர்கள்’ என கமென்ட் செய்து வருகிறார்கள்.

Related Stories: