இந்திய படவுலகில் பல்வேறு மொழிகளில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருப்பவர், தமன்னா. இந்தியில் ‘ஓ ரோமியோ’, ‘மரியா ஐபிஎஸ்’, ‘வி சாந்தாராம்’, ‘விவான்’, ‘ரேஞ்சர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘புருஷன்’ என்ற படத்தில் நடிக்கிறார். சினிமாவை தாண்டி, ‘தமன்னா ஃபைன் ஜூவல்லரி’ என்ற நிறுவனம் சார்பில் அதன் முதல் கடையை மும்பையில் தொடங்கியுள்ளார்.
இதன் அறிமுக விழாவில் தமன்னாவின் நெருங்கிய தோழிகளும், நடிகைகளுமான காஜல் அகர்வால், சமந்தா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் மற்றும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். தமன்னாவின் புது முயற்சிக்கு ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்ட தமன்னா, ‘நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம்’ என்ற தகவலை பகிர்ந்துகொண்டார்.
