சேலம் விஷ்ணு இசையமைப்பாளர் சங்கீத ராஜன் காலமானார்

சென்னை: நடிகர் தியாகராஜன் எழுதி இயக்கிய ‘பூவுக்குள் பூகம்பம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எஸ்.பி.வெங்கடேஷ் என்கிற சங்கீத ராஜன் (70) நேற்று காலமானார். தமிழில் ‘சேலம் விஷ்ணு’, ‘காவல் பூனைகள்’, ‘வடக்குவாசல்’, ‘என் கணவர்’, ‘ஏர்போர்ட்’, ‘சினேகிதி’, ‘முனி: பார்ட் 1’ ஆகிய பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி மற்றும் மலையாளம் பல மொழிகளில் 1500 படங்களில் 5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ள அவர் ‘பைத்ருகம்’ என்ற மலையாள படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில விருதையும் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக நுரையீரல் பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்த சங்கீத ராஜன் நேற்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். திரை உலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: