சென்னை: கடந்த சில நாட்களாக தனுஷ், மிருணாள் தாக்கூர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் இந்த தகவலுக்கு இரு தரப்பினரும் எந்த வித விளக்கமும் தெரிவிக்காத நிலையில் தற்போது மிருணாள் தாக்கூர் மவுனம் கலைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.அமீன், ஜெஸ்லீன் ராயல் ஆகியோர் குரலில் வெளியாகியுள்ள ‘பீகி பீகி’ என்ற ஆல்பம் பாடலில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ளனர்.
அதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிருணாள் தாக்கூரிடம் தனுஷுடனான காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘என்னை பற்றியும், தனுஷை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்து செய்திகளும் பொய்யானவை. அவை அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றவை. தனுஷ் எனக்கு எப்போதும் ஒரு சகோதரர் மட்டும்தான். அண்ணன் மாதிரி அவர். எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான நட்பு மட்டுமே’’ என்று கூறியுள்ளார். மிருணாளின் இந்த பதில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
