சாயிஷா கவர்ச்சி நடனத்துக்கு ஆர்யா கமென்ட்

சென்னை: மறைந்த பாலிவுட் சீனியர் நடிகர் திலீப் குமாரின் உறவினர் சாயிஷா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் அறிமுகம்ஆனார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், ஆர்யா ஜோடியாக ‘கஜினிகாந்த்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித் தார். அப்போது அவர்கள் காதலித்தார்கள். பிறகு இருவீட்டுப் பெற்றோரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு ஆரியானா என்ற பெண் குழந்தை உள்ளது. ‘டெடி’ படத்துக்குப் பிறகு  நடிப்பில் இருந்து விலகிய சாயிஷா, தற்போது ‘பத்து தல’ என்ற படத்தில் ‘ராவடி’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். அவரது பாடல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சாயிஷா கூறுகையில், ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் எ்னறு சொல்வார்கள். என்னுடைய விஷயத்தில் ஒரு ஆண் இருக்கிறார். ‘பத்து தல’ யின் தயாரிப்பாளர் என் வீட்டுக்கு வந்தபோது, படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெறும் பாடல் காட்சியில் யாரை ஆட வைப்பது என்று தெரியவில்லை’ என்றார். அப்போது ஆர்யா, ‘சாயிஷா மீண்டும் நடிக்கிறார். அவரை வேண்டுமானால் கேளுங்கள்’ என்றார். ஆர்யா முற்போக்கு எண்ணம் கொண்ட மனிதர். எனது கணவராக அவர்அமைந்திருப்பது எனது பாக்கியம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பணியாற்றுவது ஒரு கனவு போன்றது. என்னுடன் கவுதம் கார்த்திக் ஆடினார். சிம்புவுடன் இன்னும் நான் பணியாற்றவில்லை’ என்றார்.

தனது மனைவி சாயிஷாவின் நடனம் குறித்து ஆர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘பெரிய திரையில் மீண்டும் உன்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீ சிறந்தவள். இது ஒரு தொடக்கம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: