சென்னை: கடந்த 2ம் தேதி திரைக்கு வந்திருந்த ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், ஐஸ்வர்யா கே.எஸ். அவர் கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே நடனம் மற்றும் விளையாட்டில் ஈடுபட்ட நான், தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடியுள்ளேன். கோவிட் லாக்டவுனில் நடித்த குறும்படம், எனது வாழ்க்கை யில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு படத்திலும், இன்னொரு பான் இந்தியா படத்திலும் நடிக்கிறேன். நயன்தாராவின் தீவிர ரசிகையான நான் நடிக்க வந்தபோது, ஆரம்பகால நயன்தாரா மாதிரி இருப்பதாக குறிப்பிட்டனர். கடினஉழைப்பின் மூலம் உயரத்துக்கு செல்ல நான் ஆசைப்படுகிறேன். வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் புதிய பாணி கதைகளுடன் வரும் இயக்குனர்களின் படங்களில், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
