வில்லன் வீட்டில் திருடிய நபர் கைது

மும்பை: மும்பை அந்தேரி மேற்கிலுள்ள லோகன்ட்வாலா பகுதியில், வில்லன் நடிகர் அபிமன்யு சிங் (51) பங்களா இருக்கிறது. இந்த பங்களாவின் குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த திருடன், அங்கிருந்த பாதுகாப்பு பெட்டியை தூக்கி சென்றார். அதில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள், ரொக்க பணம் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நடிகரின் 82 வயது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனே மும்பை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து மனோஜ் மோகன் ரத்தோடு (40) என்ற நபரை கைது செய்தனர். மனோஜ் மோகன் ரத்தோடு தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி மற்றும் அவர் மீது 14 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய
வந்தது.

அவரிடம் இருந்து ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை கள் மற்றும் திருட்டு பொருட்களை போலீசார் அதிரடியாக மீட்டனர். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி ஆகிய ெமாழிகளில் நடித்து வரும் அபிமன்யு சிங், தமிழில் ‘வேலாயுதம்’, ‘தலைவா’, ‘தாளம்’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அண்ணாத்த’, ‘டக்கர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

Related Stories: